Saturday, January 23, 2016

நினைப்பதெல்லாம் வாழ்வில் நடப்பதில்ல

ஏமாந்து போகாதே!

1. நினைப்பதெல்லாம் வாழ்வில் நடப்பதில்ல
உலகில் இருப்பதெல்லாம் கூட வருவதில்ல
காசு எதுக்கு, உலக ஆசை எதுக்கு
உலகில் எல்லாமே மாயை தானே

பல்லவி:
ஏமாந்து போகாதே, உலகை நம்பாதே
நம்பிக்கை துரோகம் உனக்கு செய்யுமே
உலகில் உண்மையான சந்தோஷம் கொடுப்பது தான்
வேதம், வேதம் தானே, வேதம் தானே
உலகில் உண்மையான சந்தோஷம் கொடுப்பவர் தான்
தேவாதி தேவன் தானே, தேவன் தானே

2. உலகத்திலே உந்தன் நாட்களெல்லாம்
புல்லுக்கொப்பானதே நீ அதை உணருவாயோ?
வீணாக நாட்களைக் கழித்தாலோ
தேவன் கணக்குக் கேட்பார் என்ன செய்வாய்?

பல்லவி

3. சேர்த்து வைத்தால் பாதுகாக்கணுமே
இன்று நீ மரித்தால் வீணாய் போகுமே
பரலோகத்தில் சேர்த்து வைத்தாலோ
நித்திய ஜீவன் உண்டு மறவாதே

பல்லவி

No comments:

Post a Comment