Saturday, February 20, 2016

அன்பராம் இயேசுவின்

அன்பரை ஸ்தோத்தரிபேன்!

பல்லவி:
அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷக் கீதங்களால் - எந்நாளுமே
பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

1. ஜீவன் உள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர்
கவலை எனக்கு இல்லையே
புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும்
என்னை நடத்திச் செல்லுவார்
காலம் மாறினாலும் பூமி அழிந்தாலும்
இயேசு என்றும் மாறிடார்
எந்தன் நேசரே என் அடைக்கலமானவர்
என் போக்கிலும் வரத்திலும்
என்னைக் கரம்பற்றி நடத்துவார்

பல்லவி

2. உலர்ந்த எலும்புகளை உயிர்க்கச் செய்தவரே
உமக்கு நிகரே இல்லையே
சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளக்கச்செய்து
என்னை நடத்திச் செல்லுவீர்
நல்ல தேவனின் வல்ல வார்த்தைகளால்
எந்தன் வாழ்வு மலரும்
எந்தன் தேவனே என் பரிகாரமானவர்
புதிய கிருபைகள் அனுதினமும் தருபவர்

பல்லவி

3. வானசேனைகள் சூழ எக்காளச் சத்தம் முழங்க
மேகமீதினில் ஒரு நாள்
மாசற்ற ஜோதியாக மகிமை இராஜனாக
மணவாளன் வந்திடுவார்
ஆயத்தமாகிடுவேன் அன்பரை சந்தித்திட
பரிசுத்தர் கூட்டத்தோடே
அந்த நாள் சமீபமே என் இதயம் பூரிக்குதே
செல்வேன் அன்பருடன் வாழ்வேன் நித்தியமாய்

பல்லவி



No comments:

Post a Comment